நாட்டில் இரண்டு முறை கிளர்சியில் ஈடுபட்ட விஜேவீரவை நினைவு கூர முடியுமெனில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை ஏன் நினைவுகூர முடியாது என கேள்வி எழுப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவு தரப்பான கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
எனினும், மாவீரர் அனுஸ்டிப்பு என்ற போர்வையில் தனித் தமிழீழத்தை அனுஸ்டிப்பதை எதிர்ப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், யுத்தத்தில் உயிரிழந்த பொது மக்களை நினைவுகூருவது அனைவரதும் தார்மீக கடமையாகும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.