நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச நீதியமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு அரசாங்கத்தின் முக்கிஸ்தர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர்கள் சிலர் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக கடந்த சில தினங்களாக கருத்து வெளியிட்டு வந்ததை அடுத்து இந்த முடிவுக்கு எடுக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
சிங்கள இணையத்தளம் ஒன்றின் செய்தியாசிரியர் மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் தொடர்பாக விஜயதாச ராஜபக்ச அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்து காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.