தமிழகத்தில் ஆட்சியை கலைக்க கோரிய மனு: ஐகோர்ட்டில் தள்ளுபடி

310 0

201611281648313203_tamil-nadu-requested-petition-disperse-regime-high-court_secvpfதமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் கூறப்பட்ட மனு நேற்று(28) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘தமிழக முதல்-அமைச்சர் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால், தமிழக அரசு எந்திரங்கள் செயல்படாமல் உள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள ஆட்சியை கலைத்து விட்டு, கவர்னர் ஆட்சிக்கு பரிந்துரை செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘ஏற்கனவே, இதேபோன்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கை நாங்கள் தள்ளுபடி செய்துள்ளோம். இப்போது மீண்டும் அதே கோரிக்கையை வேறு ஒரு வண்ணம் பூசி தாக்கல் செய்துள்ளீர்கள்.மேலும் தமிழக அரசின் ஆட்சியை நிர்வாக விவரங்களை தமிழக கவர்னர் அவ்வப்போது கேட்டறிந்து, அந்த செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக முடிவு செய்கிறார்.

எனவே, இந்த விவகாரத்தில் தலையிட முடியாது. இதுபோன்ற வழக்கை ஏற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.