அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தின் கொலம்பஸில் அமைந்துள்ள ஒஹியோ மாநில பல்கலைகழகத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றதில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தின் தலைநகர் கொலம்பஸ். அமெரிக்காவின் 15-வது மிகப்பெரிய நகராமான இங்கு ஒஹியோ மாநில பல்கலைக்கழகம் உள்ளது.
இந்த பல்கலைக்கழத்தில் நேற்று(28) காலை (அமெரிக்க நேரப்படி) துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இதில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் அபாய கட்டத்தில் இருந்து மீண்டு விட்டனர். மற்றவர்கள் குறித்து சரியான தகவல்கள் தெரியவில்லை.இந்த சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை காரணமாக பல்கலைக்கழக வளாகம் மூடப்பட்டுள்ளது.