பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு சேவைகளை செய்வது தொடர்பில் கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நேற்று(28) பாராளுமன்றத்தில் விஷேட உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, 23வது பிரிவின் கீழ் விஷேட கருத்தொன்றை வௌியிட்ட எதிர்கட்சியின் பிரதம கொரடா அனுரகுமார திஸாநாயக்க, அண்மையில் கைப்பற்றப்பட்ட கொகேன் தொடர்பில் பாராளுமன்றத்தில் அவதானத்துக்கு கொண்டு வந்தார்.
இந்த நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு உள்ளதா என்பது குறித்து ஆராய வேண்டும் எனவும் அவர் கூறினார். எதுஎவ்வாறு இருப்பினும் இந்த வர்த்தகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக தெரியவரவில்லை என, அமைச்சர் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.