செப்பு கம்பி பெறும் நோக்கில் பியகம பிரதேசத்தில் உள்ள தொலைபேசி இணைப்புகள் வழங்கும் கம்பிகளை திருடிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களில் இரண்டு இராணுவ சிப்பாய்களும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் தொலைபேசி நிறுவனத்தால் நிலத்தடியில் போடப்பட்டுள்ள தொலைபேசி கம்பிகளை வெட்டி திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரவு நேரங்களில் இவர்கள் குறித்த திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதோடு, இவர்களால் திருடி எடுக்கப்பட்ட தொலைபேசி இணைப்புக் கம்பிகளின் மதிப்பு சுமார் 6 இலட்சத்திற்கு அதிகம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.