CCTV யில் சிக்கிய 600 பேரின் தொலைபேசி இணைப்புகளை துண்டித்த திருடர்கள்

212 0

பியகம, மல்வான கராபுகஸ்சந்தியில் அரச தொலைபேசி நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான தொலைபேசி இணைப்புக்களை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேர் இன்று மஹர நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி அதிகாலை குறித்த பகுதியின் நிலத்திற்கு கீழ் இருந்த தொலைபேசி இணைப்புக்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளதுடன் குறித்த திருட்டுச் சம்பவம் அருகில் இருந்த சிசிரிவி கெமராக்களில் பதிவாகி இருந்தது.

குறித்த சிசிரிவி ஆதரத்துடன் சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருட்டிற்காக பயனபடுத்திய கண்டேனர் மற்றும் சிறிய லொறி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அவர்கள் திருடிய தொலைபேசி இணைப்புக்கள் சுமார் 660 மீற்றர் நீளமானது எனவும் அதனூடாக 600 பேருக்கு தொலைபேசி இணைப்புகளை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.