20வது திருத்தத்தின் நகல்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை 19வது திருத்தத்தினை நீக்குவதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனதிராசா தெரிவித்துள்ளார்.
மோர்னிங்கிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுகட்சி ஏன் 20 திருத்தத்தினை ஏன்எதிர்க்கின்றது?
20வது திருத்தத்தின் நகல்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை 19வது திருத்தத்தினை நீக்குவதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
19வது திருத்தத்தை ஜனநாயக அரசமைப்பாக கருதமுடியும். 19வது திருத்தத்தின் சில அம்சங்களை பாதுகாக்கவேண்டும்.
அதிகாரத்தை மீண்டும் ஜனாதிபதிக்கு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது .நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகவே 19வது திருத்தம் கொண்டுவரப்பட்டது இலங்கையில் உண்மையான ஜனநாயக ஆட்சிக்கு முறைக்குவித்திட்டது 19வது திருத்தமே. நாடாளுமன்ற சட்டம், நாடாளுமன்ற தீர்மானம், 19வது திருத்தத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட, நாட்டில் ஜனநாயகத்தை உறுதிசெய்தல் ஆகியவற்றை வலுப்படுத்தவேண்டும்.
13வது திருத்தத்தில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பில் இந்தியா செல்வாக்கு செலுத்துவதற்கு இலங்கை அனுமதிக்கவேண்டுமா?
13வது திருத்தம் குறித்து நாங்கள் பார்த்தோமென்றால் அது இந்திய இலங்கை உடன்படிக்கை 1987 இல் கைச்சாத்திடப்பட்டதன் விளைவாக நடைமுறைக்கு வந்தது.தமிழர்களின் நலன்களை மனதில் வைத்து இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது என்பதால் அதனை மாற்றுவது குறித்த இந்தியாவின் கருத்து அவசியம்.
13வது திருத்தத்தை மேலும் கட்டியெழுப்பி அர்த்தபூர்வமான அரசியல் தீர்வை காண்பதற்கு அப்பால் செல்லவேண்டும் என்ற வார்த்தைகளையே இந்திய அரசாங்கம் அவ்வேளை பயன்படுத்தியிருந்தது.
புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு 13 வது திருத்தம் நீக்கப்பட்டால் நாங்கள் இது குறித்து இந்திய இலங்கை அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும்
இலங்கை தற்போது எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கான தீர்வாக நாங்கள் இதனை கருதவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டதை போல நாங்கள் 13 வது திருத்தத்துக்கு அப்பால் சென்றுதீர்வை காணவேண்டும்
இலங்கையில் சமஸ்டி முறையை ஏற்படுத்துவது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
முன்னாள் பிரதமர் எஸ.;டபிஸ்யூ.ஆர்டி பண்டாரநாயக்க காலத்திலேயே சமஸ்டி முறையை நடைமுறைப்படுத்தவேண்டியதன் தேவை குறித்து ஆராயப்பட்டது.
அவ்வாறான முறையை கோரி கண்டி தலைவர்கள் டொனமூர் சோல்பரி ஆணைக்குழுவின் முன் சென்றார்கள். பல தசாப்தகாலங்களாக தமிழ்கட்சிகள் முன்வைத்துள்ளதை போல இலங்கையின் ஆட்சிமுறையை சமஸ்டிமுறைக்கு மாற்றும் யோசனையில் நாங்கள் உறுதியாகஉள்ளோம்.
அவ்வாறான முறை நாட்டை ஐக்கியநாடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவும்.நாட்டில் தற்போது காணப்படுகின்ற அரசியல்பிரிவினைகளுக்கு தீர்வை காண்பதற்கான பொருத்தமான தீர்வாக அது காணப்படும்.
திருத்தத்திற்கான மாற்றீடு எதனையாவது நீங்கள் முன்வைக்கின்றீர்களா?
-தற்போது தயாரிக்கப்படும் அரசமைப்பின் நகல்வடிவை நாங்கள் ஆராயவேண்டும்,புதிய அரசமைப்பு தமிழ் மக்களுக்கு மோசமான பாதிப்பை ஏற்;படுத்துமா நாடு தற்போது எதிர்கொண்டுள்ள அரசியல் விவகாரத்துக்கு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து நாங்கள் இந்திய இலங்கை அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும்.
அரசமைப்பு மாற்றங்கள் தொடர்பான ஜனநாயக யோசனைகளை நாங்கள் முன்வைப்போம்,நாங்கள் நாட்டில் எதிர்காலத்தில் சமஸ்டி ஆட்சி முறையை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்.