20வது திருத்தம் குறித்து அரசாங்கத்துக்குள் மாற்றுக்கருத்துக்கள்

237 0

20வது திருத்தம் குறித்து அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

20வது திருத்தம் குறித்து அரசாங்கத்துக்குள் மாற்றுக்கருத்துக்கள் காணப்படுவதன் காரணமாகவே பிரதமர் 20வது திருத்தம் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கான புதிய குழுவை நியமித்துள்ளார் என ஐக்கியமக்கள்சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முழுமையாக ஆராயமால் 20வது திருத்தம் குறித்த நகல்வடிவை சமர்ப்பித்தது என ரஞ்சித்மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.

நகல்வடிவில் என்ன விடயங்கள் காணப்படுகின்றன என்பது நீதியமைச்சருக்கு மாத்திரம் தெரிந்திருந்தது என ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும் தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் 20வது திருத்தத்துக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என தெரிவித்துள்ள ரஞ்சித்மத்துபண்டார 20வது திருத்தத்தினை நிறைவேற்றுவதற்கான மூன்றில் இரண்டுபெரும்பான்மையும் அரசாங்கத்திடம் இல்லை என தெரிவித்துள்ளார்.

தற்போது 20வது திருத்த நடைமுறைகளை தாமதிப்பதற்காக புதிய குழுநியமிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.