இலங்கைக்கு உதவும் நாடுகளில் சீனா முதலிடம்

505 0

30-1464587472-china-economy2016ஆம் ஆண்டில் இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்காக 855.4 மில்லியன் டொலர்களை வழங்கியதன் மூலம் சீனா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளில் முதலிடம் பெற்றுள்ளது.
இதன்படி இலங்கையுடன் அந்த நாடு, எட்டு கடன் திட்ட உடன்படிக்கைகளை செய்துக்கொண்டுள்ளது.
அத்துடன் இரண்டு நன்கொடை திட்டங்களையும் ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
இதில் பாரிய அபிவிருத்தி திட்டங்களாக தென் அதிவேக பாதை அமைப்பு, மாத்தளை குடிநீர் திட்டம், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கான கிராம அபிவிருத்தி திட்டம் என்பன உள்ளடங்குகின்றன.
இதேவேளை சீனாவுக்கு அடுத்தப்படியாக ஜப்பான் இலங்கைக்கு உதவும் நாடாக மாறியுள்ளது.
கட்டுநாயக்க வானூர்தி தள விஸ்தரிப்புக்காக அந்த நாடு 311.7 மில்லியன் டொலர்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment