கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்படும் பஸ் முன்னுரிமை திட்டம் நாளை (14) முதல் அமுல்படுத்தப்படள்ளது.
நான்கு பிரதான வீதிகளை மையப்படுத்தி இந்த செயற்பாட்டை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அமுல்படுத்தப்படும் வீதி ஒழுங்கு விதிகளை முறையான கடைப்பிடிக்காத சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.