பிரதி தலைவர் தெரிவு – ஐ.தே.க.இன் செயற்குழு கூட்டம் நாளை

276 0

ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதி தலைவரை தெரிவு செய்வதற்காக செயற்குழு கூடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இக்கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பாகவும் தீர்க்கமான தீர்மானம் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டஎட்டு பேரில் ஒருவரை பிரதி தலைவர் பதவிக்காக தெரிவு செய்யவுள்ளதாக கட்சியின் உயர் மட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, பிரதி தலைவரின் பதவிக்காக வேறு சிலரின் பெயர்களும் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் வாக்கெடுப்பின் மூலம் பிரதி தலைவர் செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது.