கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை சிறிலங்காக்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கமைய மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த 405 இலங்கையர்கள் 03 விசேட விமானங்கள் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறிலங்காக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கட்டார், ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணி புரிந்து வந்த 405 இலங்கையர்களே இன்று காலை விசேட விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.
சிறிலங்கா வந்தடைந்த அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.