வெலே சுதாவின் சகோதரி உட்பட மூவர் கைது

297 0
சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஹெரோயின் கடத்தல்காரர் வெலே சுதாவின் சகோதரி உள்ளிடட் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் போது அவர்களிடம் இருந்து கேரள கஞ்சா தொகையொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறிலங்கா பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 4186 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் போதைப்பொருள் தொடர்பில் 1205 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 1143 பேரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.