சிறிலங்காவில் மீண்டுமொரு சர்வாதிகார ஆட்சிக்கு இடமளிக்கமாட்டோம்- மக்கள் விடுதலை முன்னணி

312 0

சிறிலங்காவில் மீண்டுமொரு சர்வதிகார ஆட்சிக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியக்குழு உறுப்பினர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டுமென அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் ஏனைய பல கட்சிகள் 19 ஆவது திருத்தச்சட்டத்தை ஒருபோதும் நீக்க கூடாது எனவும் அதில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையிலேயே நாமல் கருணாரட்ன, 19 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்றே சிறிலங்காவில் இதுவரையான காலமும் போராட்டங்கள் இடம்பெற்றன.

இதனால்தான் 19 ஆவது திருத்தச்சட்டம் ஸ்தாபிக்கப்பட்டது. இதில் நல்லது கெட்டது என இரண்டும் உள்ளது.

இதிலுள்ள பிழைகளை நிவர்த்தி செய்து நாம் முன்னோக்கிதான் செல்ல வேண்டும். ஆனால், இதனை விடுத்து மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கு செல்லவே அரசாங்கம் முயற்சிக்கிறது. இதற்கு நாம் ஒருபோதும் இணங்க மாட்டோம்” என குறிப்பிட்டுள்ளார்.

1Share