மோசமான வரவுசெலவுதிட்டத்தை எதிர்கொள்ள தயாராகயிருங்கள் – எரான்

204 0

இலங்கை கடந்த 35 வருடகாலத்தில் சந்தித்திராத மோசமான வரவுசெலவுதிட்டத்தை எதிர்கொள்ளதயாராகயிருக்கவேண்டும்என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  எரான் விக்கிரமரட்ண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கை தவறுகளே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார நெருக்கடி தருணத்தில் சுகாதார நெருக்கடியையும் வாழ்வாதார நெருக்கடிiயையும் கையாள்வதற்காக செலவீனங்கள் அதிகரிப்பதை எதிர்பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் அரசவருமானங்கள் முற்றாக இல்லாமல் போனதே தற்போதைய நெருக்கடிக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

இதுகொள்கை தவறுகாரணமாக உருவான நெருக்கடி என தெரிவித்துள்ள எரான் விக்கிரமரட்ண அரசாங்கம் கூடியவிரைவில் அதனை ஏற்றுக்கொண்டு தவறினை சரிசெய்தால் இந்த நெருக்கடியிலிருந்து விடுபடமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.

2020ஆரம்பத்தில் அரசாங்கம் முன்னெடுத்த வரிகுறைப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போதைய நெருக்கடி உருவாகதொடங்கியது என குறிப்பிட்டுள்ள அவர் கொவிட்19இன் தாக்கம் தீவிரமடைந்ததை தொடந்து இந்த நிலை மேலும் மோசமடைந்தது என குறிப்பிட்டுள்ளார்.
2019 ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அரச வருமானம் 29 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ள எரான் எதிர்வரும் காலங்களில் நிதிநிலைமை மேலும் மோசமடையும் எனவும் தெரிவித்துள்ளார்.