இலங்கை யாத்திரிகர்களை கவர இந்தியா நடவடிக்கை

595 0

12745590_1இந்தியாவில் உள்ள பல பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்கு இலங்கை யாத்திரிகர்களை கவரும் வகையிலான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தில் பல பௌத்த வழிபாட்டுத் தலங்கள் உள்ளபோதிலும், அதுகுறித்து இலங்கை யாத்திரிகர்களுக்கு அதிக அளவிலான தகவல்கள் அற்ற நிலையில் உள்ளனர்.
கடந்த வாரம் கொழும்பு விருந்தகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இந்திய தூதுவர் வை.கே சின்ஹாவும் பங்குபற்றினார்.
இந்திய சுற்றுலாத்துறையின் செயலாளர் ஸ்ரீ வினோத் ஸூட்ஷீ கருத்துத் தெரிவிக்கையில் இலங்கை பௌத்த மக்கள் இந்தியாவில் உள்ள ஏனைய பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்கும் விஜயத்தை மேற்கொள்வதில் ஆர்வம்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
அதேவேளை கடந்த வருடத்தில் இந்தியாவிற்கு வருகைதந்திருந்த சர்வதேச சுற்றுலா பயணிகளில் 4 சதவீதமானவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment