20ஆவது திருத்தத்தால் சுதந்திரம் இல்லாமல் போகும் அபாயம் – சரத் பொன்சேகா

203 0

20ஆவது திருத்தச் சட்டம் காரணமாக மிகவும் சிரமப்பட்டு நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த சுதந்திரம் மற்றும் பலம் இல்லாமல் போவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “20ஆவது திருத்தச் சட்டம் காரணமாக மிகவும் சிரமப்பட்டு நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த சுதந்திரம் மற்றும் பலம் இல்லாமல் போகும் விதத்தை பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை என்பதால் 20ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றோம்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக நாடு முன்நோக்கி செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. இது 19ஆவது திருத்தச் சட்டத்தின் தவறல்ல.

அன்றைய தலைவர்களாக இருந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் பலவீனம் காரணமாக அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாமல் போனது” எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.