விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்கான உயரிய நாள் இது.
தேசிய மாவீரர் நாள் 2016 பிரித்தானியாவில் ஸ்டாட்போர்ட நகரில் ஒலிம்பிக் பார்க்கில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.பொதுச்சுடரினை லெப்டினன் குட்டி என்றழைக்கப்படும் இராயநாயகம் ஜஸ்டின் செல்வகுமாரின் தாயார் றீற்றா அவர்கள் ஏற்றி வைத்தார் அதனை தொடர்ந்து பிரித்தானியா கொடி ஏற்றப்பட்டது.பிரித்தானியா கொடியினை இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் சஞ்சு வசிகணேசன் அவர்கள் ஏற்றி வைத்தார் .தொடர்ந்து
தமிழீழ தேசிய கொடி ஏற்றப்பட்டது தமிழீழ தேசிய கொடியினை அனைத்துலக செயலக பொறுப்பாளர் பொ.மகேஸ்வரன் அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து தளபதி கேணல் ஜெயம் அவர்களின் தாயார் திருமதி காளீஸ்வரி பாலகுரு அவர்கள் ஏற்றிவைத்தார்
ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுகளை தொடர்ந்து மாவீரர்களின் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.