கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

218 0

யாழ்ப்பாண விசேட அதிரடிப்படையினரால் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்று (10) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநகர் பகுதியை சேர்ந்த நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

கடந்த வாரமும் யாழ்ப்பாண விசேட அதிரடிப் படையினரால் யாழ்ப்பாண நகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஹேரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.