சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

224 0

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் இன்று (வியாழக்கிழமை) அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,152 ஆக அதிகரித்துள்ளது.

மாலைத்தீவிலிருந்து  வருகை தந்து தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்த 2,951 பேர் வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.