20வது திருத்தத்தின் நகல்வடிவில் திருத்தங்கள் செய்யப்படலாம் என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
20வது திருத்தத்தை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள குழு தேவைப்பட்டால் நகல்வடிவில் திருத்தங்களை மேற்கொள்ளும் என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
20வது திருத்தம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியான திகதியிலிருந்து இரண்டுவாரத்துக்குள் நீதியமைச்சர் 20வது திருத்தத்தின் நகல்வடிவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர் சகலதரப்பினரினது கருத்துக்களையும் அறிந்துகொள்வதற்கு இரண்டுவாரங்கள் அவசியம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நகல்வடிவு சமர்ப்பிக்கப்பட்டதும் முதலாவது வாசிப்பு இடம்பெறும் அதன் பின்னர் நகல்வடிவை ஆராய்ந்து திருத்தங்களை முன்வைப்பதற்கு உச்சநீதிமன்றத்துக்கு கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் உச்சநீதிமன்றம் என்ன திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்ன மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கும் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் மேலும் திருத்தங்களுக்கான வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார்.