தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 7ம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் நமூர்,வேன்ஸ்,அந்தினேஸ்,போஸ்தோன்(பெல்சியம்)ஆகிய மாநகரங்களின் நகர முதல்வர்களையும் ஐரோப்பிய பாராளமன்ற உறுப்பினர்களையும் வரும் பாதைகளில் சந்தித்து தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனுக்கள் அரசியற் சந்திப்பின் ஊடாக கையளிக்கப்பட்டது .
தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறித்தியும் தமிழீழ மக்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதுடன் சிங்கள பேரினவாத அரசின் சர்வாதிகார ஆட்சியினையும் தமிழீழ மக்கள் எம் தமிழீழத்தில் சிங்களப்பேரினவாத அரசின் அடக்குமுறைக்குள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதினையும் , தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துரைத்தும் ஆறாம் ஏழாம் நாள்கள், கடும் ஏற்றம், மழை என இயற்கையின் சவால்களுக்கு மத்தியிலும் மனிதநேய ஈருருளிப்பயணம் ஐ.நா நோக்கி மாவீரர் துணையுடன் பயணித்துக்கொண்டு இருக்கின்றது .
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”