சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நபர்களை தகனம் செய்ய வேண்டும் என வெளியான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி தாக்கம் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அதற்கைமய குறித்த விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 26ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நபர்களை தகனம் செய்ய வேண்டும் என வெளியான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஸாட் பதியுதின் உள்ளிட்ட 12 பேர் இந்த மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.