வவுனியா சாம்பல்தோட்டம் பிள்ளையார் கோவிலுக்கருகாமையில் நேற்று(புதன்கிழமை) இரவு 9 மணியளவில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து செக்கடிப்புளவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் எதிர் திசையில் வவுனியா நோக்கி வந்த காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கரிகரன், மதுசன், சர்மிலன் ஆகிய மூவர் படுகாயமடைந்து நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கார் பாரிய சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் நெளுக்குளம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.