இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது குறித்த இறுதி தீர்மானம் – சிறிலங்கா அரசாங்கத்தின் அறிவிப்பு

317 0

இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது குறித்த இறுதி தீர்மானம் எடுப்பதை அரசாங்கம் ஒருமாத காலத்துக்கு பிற்போட்டுள்ளது.

இந்த விடயத்தில் தொடர்புபட்ட குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே இறுதிதீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல  குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் மாடுகளை வெட்டுவதை தடை செய்வதற்கான திட்டத்தை மஹிந்த ராஜபக்‌ஷ நாடாளுமன்றில் முன்வைத்தார். இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது குறித்த இறுதி தீர்மானம் எடுப்பதை அரசாங்கம் பிற்போட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமைச்சரவை பத்திரத்தை எப்போது சமர்ப்பிப்பது என்பதை பிரதமரே தீர்மானிப்பார் என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.