25 மாணவர்களுக்கு உதவித் திட்டம் வழங்கல்

242 0

குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களிலுள்ள பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்களை மீளச் சேர்த்து அவர்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில் கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பணம் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்குகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.சபூஸ் பேகம், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவன உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது இடைவிலகிய மாணவர்களை மீளச் சேர்த்து அவர்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில் 2500 ரூபாய் பணம் இருபத்தைந்து மாணவர்களது பெற்றோருக்கு வழங்கி வைக்கப்பட்டது. (