உத்தேச 20வது திருத்தத்தை மறுஆய்வுக்கு உட்படுத்துமாறு தேசிய அமைப்புகளின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிநாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதை தடுப்பதற்காக அரசமைப்பின் 53பிரிவினை தொடர்ந்தும் தக்கவைக்குமாறும் தேசிய அமைப்புகளின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
20வது திருத்தம் குறித்த தங்கள் கரிசனைகளை சுட்டிக்காட்டியும் புதிய அரசமைப்பு தொடர்பிலும் கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக தேசியஅமைப்புகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் துரோகத்தனமான நடவடிக்கைகளால் நாடு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் புதிய அரசாங்கம் தனது தந்திரோபாயங்கள் குறித்து மிகவும் அவதானமாகயிருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்பு தொடர்பான மக்களின் கருத்துக்களை பெறுவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குமாறு ஜனாபதியை தேசிய அமைப்புகளின் சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.
புதிய அரசமைப்பை உருவாக்கும் வரை மாகாணசபை தேர்தல்களை இடைநிறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ள சம்மேளனம் 20வது திருத்தத்தின் நகல்வடிவில் பாரியமாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.