நெதர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி

317 0

img_1461நெதர்லாந்தில் அல்மேர என்னும் பிரதேசத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் . 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை வெகுசிறப்பாக நினைவு கூரப்பட்டது. தமிழீழ விடிவிற்காய் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எம் மண்ணின் மைந்தர்களை நினைவு கூர இவ்வாண்டு வழமையை விட கூடுதலான மக்கள் கலந்து கொண்டார்கள்.12.55இற்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி பொதுச்சுடரினை மாவீரர் குடும்பத்தினர் ஏற்றிவைத்தனர்.

அதனைத் தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பின் மாவீரர்நாள் அறிக்கை வாசிக்கப்பட்டு சரியாக 01.35 இற்கு மணியொலி எழுப்பப் பட்டு அடுத்து அகவணக்கமும்இடம்பெற்றது. 01.37இற்கு எங்கள் காவிய நாயகர்களுக்கு மாவீரர் குடும்பத்தினர் ஈகைச்சுடரேற்ற தொடர்ந்து பொது மக்கள் அனைவரும் திரளாக வந்து அந்த சூரியப் புதல்வர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து தமிழமுதம் இசைக்குழுவினர் தமது எழுச்சி கானங்களால் எம்கார்த்திகைப் பூக்களுக்கு வணக்கம் செலுத்தினர் அதனைத் தொடர்ந்து எழுச்சி நடனங்கள் எழுச்சிக் கவிதைகள் நாடகம் சிறப்புரை என்பனவும் வெகு சிறப்பாக இடம் பெற்றன.

இப்புனித நன்னாளில் தலைவன் வழியில் மாவீரர் அடி தொடர்ந்து அவர் கனவை நனவாக்குவோம் என்று அனைவரும் எழுந்து நின்று உரத்த குரலில் உறுதியெடுத்துக் கொண்டனர்.சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பிக்க. மிகு உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டு இறுதியாக தமிழீழ தேசியக்கொடி கேயேற்றலைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி உணர்வுடன் பாடி சுமார் 20:30 மணியளவில் நிகழ்வுகள் நிறைவுற அனைத்து தமிழ் உறவுகளும் அமைதியாக எம் மண்ணின் மைந்தர்களின் நினைவுகளை தம் நெஞ்சிலே சுமந்த வண்ணம் அமைதியாக கலைந்து செல்ல நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றது.

img_1204 img_1206 img_1214 img_1215 img_1217 img_1219 img_1221 img_1224 img_1225 img_1230 img_1272 img_1273 img_1276 img_1279 img_1282 img_1285 img_1287 img_1293 img_1294 img_1295 img_1297 img_1299 img_1301 img_1316 img_1321 img_1322 img_1328 img_1330 img_1347 img_1356 img_1359 img_1367 img_1372 img_1373 img_1375 img_1377 img_1380 img_1387 img_1392 img_1397 img_1399 img_1413 img_1419 img_1428 img_1433 img_1448 img_1455 img_1461 img_1462 img_1463 img_1466