வவுனியாவில் மருத்துவர்கள் எட்கா உடன்படிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களால் இன்று மதியம் வைத்தியசாலை வளாகத்தினுள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
எட்காவை இலங்கைக்குள் கொண்டுவரும் வரவு செலவை எதிர்ப்போம், மருத்துவர்க்கு தண்டப்பணம் விதிக்கும் வரவு செலவை எதிர்ப்போம், சுகாதாரத்தை தனியார் மயமாக்கும் வரவு செலவை இரத்து செய், என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 20க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு வாரத்தில் இதற்குறிய முடிவு கிடைக்கவிட்டால் அடுத்து ஒருவார காலத்திற்கு அரசாங்க சேவையை மாத்திரமின்றி தனியார் சேவைகளையும் நிறுத்தி வைக்கவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் தெரிவித்தனர்.