யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது (காணொளி)

334 0

university-prosted-finsedயாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்று மாலை கைவிட்டுள்ளனர்.யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் தலைமையிலான நிர்வாகத்திற்கும் கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையையடுத்து வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

இன்று காலை ஊழியர்களின் சம்பள முரண்பாடு மற்றும் 2009ஆம் ஆண்டு கல்விசாரா ஊழியர்களாக நியமிக்கப்பட்டவர்களின் கல்வித்தகமைகள் கல்வித் திணைக்களத்தினூடாக பரிசீலிக்கப்பட வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் 2வது தடவையாக இன்று ஈடுபட்டிருந்தனர்.

கடந்த மாதம் 19ஆம் திகதி மேற்கொண்ட வேலை நிறுத்த்தின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்றையதினம் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.2009ஆம் ஆண்டு கல்விசாரா ஊழியர்களாக அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்டவர்களில் 1 தொகுதியினரின் கல்வித்தகமைகள் கல்வித்திணைக்களத்தால் பரிசீலிக்கப்பட்டு முடிவு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், 2ஆம் கட்டமாக பரிசீலிக்கப்பட வேண்டியவர்களின் முடிவுகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து பல்கலைக்கழக ஊழியர்கள் தமது பணிப்புறக்கணிப்பினை கைவிட்டுள்ளனர்.

பின்னர் பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் ஊழியர்களின் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ஏனைய கோரிக்கைகள் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்பதாக நிறைவேற்றப்படும் என்ற பல்கலைக்கழக நிர்வாகத்தின் வாக்குறுதி அளிக்கப்பட்டள்ளதாகவும் தொழிற்சங்கத் தலைவர் தங்கராசா தெரிவித்துள்ளார்.