தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலில் சர்வதேசக் குழு ஆய்வு

220 0

சிறிலங்காவின் கிழக்கு கடற்பரப்பின் சங்கமன் கண்டி இறங்குதுறையில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பாக இன்று ஆய்வு செய்யப்படவுள்ளது.

அதற்கமைய குறித்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக இலங்கைக்கு வந்துள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த விசேட நிபுணர்கள் இன்று (திங்கட்கிழமை) கப்பலில் பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அவர்கள் தீப்பற்றியுள்ள கப்பலுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மீட்பு நடவடிக்கை, பேரழிவு மதிப்பீடு மற்றும் சட்ட ஆலோசனை ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த 10 பிரித்தானிய மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விசேட நிபுணர்கள் நேற்று இலங்கைக்கு வருகைத்தந்தனர்.

கப்பலின் தற்போதை நிலைமை, எதிர்வரும் நாட்களில் ஏதேனும் வெடிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதா? என்பது தொடர்பாக விசேட நிபுணர்கள ஆய்வு செய்யவுள்ளனர்.

இலங்கைக்கு கிழக்கே சங்கமன்கண்டி இறங்குதுறையில் 38 கடல் மைல்கள் தொலைவில் எம்.டி.நியூ டயமன் என்ற எண்ணெய் தாங்கிக் கப்பல் கடந்த வியாழக்கிழமை காலை 8 மணியளவில் தீ விபத்துக்கு உள்ளாகியது.

கப்பலின் பிரதான இயந்திர அறையில் கொதிகலன் வெடித்ததைத் தொடர்ந்து தீப் பரவல் ஏற்பட்ட நிலையில் இரண்டு நாட்களாக தீயைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சி எடுக்கப்பட்டது.

இதன்பலனாக, இலங்கைக் கடற்படை, விமானப்படை, துறைமுக அதிகாரசபை மற்றும் இந்திய கடற்படை, இந்திய கடலோரப் பாதுகாப்புப்படை ஆகியன இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

ன் கிழக்கு கடற்பரப்பின் சங்கமன் கண்டி இறங்குதுறையில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பாக இன்று ஆய்வு செய்யப்படவுள்ளது.