திருகோணமலையில் வியாபாரிகள் பணிப்பகிஸ்கரிப்பு (காணொளி)

343 0

trinco-prostedவியாபார நிலையங்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு கோரிக்கை விடுத்து திருகோணமலை நகரசபை எல்லைக்கு உட்பட்ட, அநுராதபுரச்சந்தி பொதுச்சந்தை வியாபாரிகள் கடைகளை மூடி இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நுகர்வோர் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கருத்துத் தெரிவித்த வியாபாரிகள்…. யு.எஸ்.எயிட் நிறுவனத்தால் அமைத்துத் தரப்பட்ட சந்தை கட்டடத்தொகுதியை நகரசபை சீராகப் பராமரிப்பதில்லை என்றும் இக்கட்டடத்தொகுயில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்கு கதவு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்களின் கோரிக்கைக்கு அமைய அடிப்படை வசதிகளை நகரசபை செய்து தராத பட்சத்தில் பணிப்பகிஷ்கரிப்புத் தொடரும் என்றும் திருகோணமலை நகரசபை எல்லைக்கு உட்பட்ட அநுராதபுரச்சந்தி பொதுச்சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.