கண்டி பெருந்தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

283 0

downloadகண்டி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக தெல்தோட்டை லிட்டில்வெளி பிரதேச மக்களால் இன்று பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது கண்டி பெருந்தோட்ட காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை எதிர்க்கும் வகையில் அமைந்திருந்தது.

தெல்தோட்டை லிட்டில்வெளி பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘எமது காணியை அபகரிக்காதே’ ‘எமது வாழும் உரிமையை பறிக்காதே’ ‘தனியாருக்கு தோட்டக் காணிகளை விற்பனை செய்வதை உடன் நிறுத்து’ என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதன் போது குறித்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க வந்த பொழுது ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கையை முன்வைத்தனர்.

இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க எக் காரணம் கொண்டும் அரச காணிகளை தனியாருக்கு வழங்கப்படமாட்டாது. அது உடன் நிறுத்தப்படும் என உறுதி அளித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த இடத்தை விட்டு விலகிச் சென்றனர்.