அரசாங்கத்திற்கு பரவியுள்ள மிக கொடிய நோய்- உதய கம்மன்பில

259 0

420835902udayaஇலங்கை அரசாங்கமானது “வாகன மேனியா” (ரத கயா) மற்றும் “வெளிநாட்டு மேனியா” (ரட கயா) போன்ற நோய்களுக்கு உள்ளாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கமானது, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிறைப்பு பிரேரணையில் அமைச்சர்களுக்காக 790 மில்லியன் ரூபாவினை கோரியுள்ள நிலையில், அதனை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்கள், வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் மற்றும் தளபாடங்களுக்கு பயன்படுத்துவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது உதய கம்மன்பில சுட்டிகாட்டியுள்ளார்.

இந்நிலையில் அரசாங்கம் இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.