நினைத்து நிற்கக்கூடிய திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் – கலாநிதி எஸ்.அமலாநந்தன் (காணொளி)

420 0

new-pictureஅபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும் போது நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய திட்டங்களை தயாரிக்கப்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி எஸ்.அமலாநந்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அனர்த்தங்களைக் குறைப்பது தொடர்பாக பிரதேச செயலர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு நடாத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையில் இக்கருத்தை முன்வைத்தார்.
அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளும் போது நீண்டகால அடிப்படைகளில் திட்டத்தை தயாரித்து அதனடிப்படையில் தொடர்ச்சியாக வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். வீதி அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளும் போது வாய்க்கால்கள் அமைக்கப்படுவது முக்கியமானது.

ஒதுக்கப்படுகின்ற நிதியில் வீதி அபிவிருத்தியுடன் வாய்க்கால்களும் அமைக்கப்படுமாயின் வெள்ளம் வழிந்தோடி அனர்த்தம் ஏற்படுவதைக் குறைக்க முடியும்.இதற்கேற்ப திட்டமிடல் பணிப்பாளர்கள் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

இதே போன்று பிரதேச செயலகங்களிலும் திட்டமிடல் பணிப்பாளர், அவர்களுக்குரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.அத்துடன் யாழ்ப்பாண மாநகரசபையும் அபிவிருத்தி வேலையின் போது திட்டமிட்ட அடிப்படையில் அபிவிருத்திகளை நோக்கி நகரவேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி எஸ்.அமலாநந்தன் தெரிவித்தார்.