யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 09ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சறோஜினி இளங்கோவன் இன்று உத்தரவிட்டார்.
வித்தியாவின் கொலை வழக்கு, இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டதுபோது 12 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மாணவி கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.