மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை காணாமல்போன இரண்டாவது மாணவனது சடலமும் இன்று மீட்கப்பட்டுள்ளது.
காணாமல்போன இரண்டு மாணவர்களில் ஒருவரின் சடலம் கடந்த சனிக்கிழமை பிற்பகல் மீனவர்களின் வலையில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டதுடன், மற்றைய மாணவனின் சடலம் இன்று மீட்கப்பட்டது.ஏறாவூர் – புன்னைக்குடா கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நீராடிக் கொண்டிருந்தபோது கடல் அலையில் சிக்கி குறித்த மாணவர்கள் இருவரும் காணாமற்போயிருந்தனர்.
ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் உயர்தரத்தில் முதலாம் ஆண்டு கலைப் பிரிவில் கற்கும் ஏறாவூரைச் சேர்ந்த 17 வயதான அல்மஹர்தீன் பர்ஹான் என்ற மாணவனின் சடலம் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டது.எனினும் காணாமல்போன மற்றைய மாணவனைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் பங்குடாவெளியைச் சேர்ந்த 17 வயதான சிவகுமார் சிவதர்ஷன் என்ற மாணவனது சடலம் சம்பவம் இடம்பெற்று 3 தினங்கள் கழிந்த நிலையில் இன்று காலை மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளது.