இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அடுத்த மாதம் 9ம் திகதி வரை சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு – இராமேஸ்வரம் பகுதியில் இருந்து ஒரு விசைப் படகுடன் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து, நெடுந்தீவுக்கு தென்மேற்கே 6 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் நால்வரை, கடற்படையினர் இம் மாதம் முதலாத் திகதி கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.