கே.எம்.எல்.சரத்சந்திர பிணையில் விடுதலை

312 0

2பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முன்னாள் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத்திற்குச் சொந்தமான ஜூப் வண்டியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு இவர் அண்மையில் கைதுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து இவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில், 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவில் ஆஜராக வேண்டும் எனவும் சந்தேகநபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.