உகாண்டா நாட்டில் அரசு படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 55 பேர் பலியாயினர்.மேற்கு உகாண்டாவில் உள்ள காசேஸ் நகரில் ரோந்து சென்ற அரசு படைகளுக்கும் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் துப்பாக்கியால் கடுமையாக சுட்டு மோதி கொண்டனர். பல மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 14 போலீசார் மற்றும் 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அரசு படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 55 பேர் பலியானதை உயர் போலீஸ் அதிகாரி பெலிக்ஸ் கவேசி உறுதி செய்தார்.