மத்திய அரசை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

294 0

201611281116334348_dmk-leader-mk-stalin-led-protest-against-central-government_secvpfசென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் முன்பு தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.இந்த விவகாரத்தில் நாள்தோறும் விதவிதமான அறிக்கைகளை வெளியிட்டு மக்களை குழப்பி வரும் மத்திய அரசை கண்டித்தும், பொதுமக்களின் சிரமங்களை தீர்க்க கோரியும் தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் முன்பு தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் ஏராள மானோர் பங்கேற்றனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, சுப்பு லட்சுமி ஜெகதீசன், வாகை சந்திரசேகர், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், ஜெ.அன்பழகன், ரங்கநாதன், தாயகம் கவி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.