மோடியை வைகோ பாராட்டுவதா?: முத்தரசன்

261 0

201611281125296919_mutharasan-condemned-vaiko-support-to-pm-modi_secvpfரூபாய் நோட்டு பிரச்சினையில் பிரதமர் மோடியை வைகோ பாராட்டியதற்கு இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கருப்பு பண ஒழிப்புக்காக ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ஆனால் கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் தங்கம், வைரம், நிலம் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் தான் முடக்கி இருப்பார்கள்.

பிரதமரின் இந்த நடவடிக்கை சாதாரண மக்களைத்தான் பாதிக்கிறது. மோடியின் நடவடிக்கையை வைகோ ஆதரிப்பதாக கூறுகிறார்.தனது அறிவிப்பால் பெரும் முதலாளிகள் பலர் தூக்கம் இல்லாமல் தவிப்பதாக மோடி கூறுகிறார். ஆனால் அந்த முதலாளிகளின் வங்கி கடன் ரூ.7 ஆயிரம் கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதையும் வைகோ ஆதரிக்கிறாரா?

பிரதமர் மோடியை வைகோ திடீரென ஆதரிப்பதற்கு காரணம் என்ன? என்பதற்கு வைகோதான் பதில் சொல்ல வேண்டும்.ரூபாய் நோட்டு விவகாரத்தில் பா.ஜனதா தவிர அனைத்து கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றன. இவ்வாறு முத்தரசன் கூறினார்.