எமது கட்சியில் குடும்ப ஆட்சி முறைமை கிடையாது!- நவீன் திஸாநாயக்க

262 0

naveenஎமது கட்சியில் குடும்ப ஆட்சி முறைமை கிடையாது என பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.வலப்பன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,எமது கட்சியின் தலைவர் இரண்டாம் நிலைத் தலைவர்களை உருவாக்கி வருகின்றார். சஜித் பிரேமதாச இருக்கின்றார், நான் இருக்கின்றேன், சாகல ரட்நாயக்க இருக்கின்றார், அகில விராஜ் காரியவசம் இருக்கின்றார்.

இவ்வாறு கட்சியின் தலைவர் இரண்டாம் நிலைத் தலைவர்களை உருவாக்கி வருகின்றார். இதில் யார் தலைவராவார்கள் என்பது எனக்குத் தெரியாது, அது விதியின் தீர்மானமாகவே அமையும். மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அவ்வாறான ஓர் நிலைமை இருக்கவில்லை.  மஹிந்த ஆட்சிக் காலத்தில் கோத்தபாய ராஜபக்ச மட்டுமே திறமைசாலி, நாம் அதனை நிராகரிக்கவில்லை, அவர் நாட்டுக்காக சேவையாற்றியுள்ளார்.

எனினும் ஒரு குடும்பத்தினால் மட்டும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அந்தக் காலத்தில் போன்று திடீர் தீர்மானங்களை எடுத்து நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.