சிறிலங்காவில் அகில விராஜ் காரியவசத்திடம் சுமார் 2 மணித்தியாலங்கள் விசாரணை

252 0

சிறிலங்காவில் ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியம் வழங்க முன்னிலையாகியிருந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் சாட்சியங்கள் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியிருந்தார்.

அவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.