பதவி மீது மோகம் இல்லை – தனது லட்சியம் தமிழீழமே – வைகோ

307 0

14-vaiko07-300விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் எனக்கு துப்பாக்கி சுட பயிற்சி கொடுத்தார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

எனக்கு பதவி மீது எந்த மோகமும் இல்லை. எனது லட்சியம், கனவு எல்லாம் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பது தான் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா மற்றும் புத்தகங்கள் வெளியீட்டு விழா இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வைகோ, பிரபாகரன் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்போது அவர், பிரபாகரன் இந்தியாவை பெரிதும் நம்பினார். ஆனால் அவருக்கு இந்தியா துரோகம் தான் செய்தது.