காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு இலங்கையிலுள்ள இராஜதந்திர சமூகம் தனது ஆதரவை வெளியிட்டுள்ளது,
பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக பணியாற்றுபவர்கள் தொடர்ந்தும் அந்த பணியை முன்னெடுப்பது அவசியம் என ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த காணாமல்போனவர்களின் குடும்பத்துடன் நாள் தோளோடுதோள்நிற்கின்றேன் என அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த குடும்பங்கள் மிகமோசமான மனவேதனையை அனுபவித்துள்ளன,என குறிப்பிட்டுள்ள அவர் காணாமல்போனவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக பணியாற்றுபவர்கள் தொடர்ந்தும் அவ்வாறு செயற்படுவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்படுவதற்கு முடிவு காண்பது மாத்திரம்போதாது பாதிக்க்பட்ட குடும்பங்களுக்கு பதில் கிடைக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் பணி பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்களுக்கு மாத்திரமல்ல அடுத்த தலைமுறைக்கும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய கனடா தூதுவர்களும் தங்கள் டுவிட்டர் செய்திகளை பதிவு செய்துள்ளனர்.