தமிழர்களின் தலைவன் வே.பிரபாகரனே – சீமான்

343 0

seemanநாம் அனைவரும் புறநானூற்றில் வீரத்தை படித்தோம். எனினும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வீரத்தை படைத்தார்.

வீரம் என்பது நூறு பேரை வெட்டி வீழ்த்துவது அல்ல. தன்னுயிரை கொடுத்தேனும் இன்னொரு உயிரை காப்பாற்றுவதே உண்மையான வீரம்.

அப்படிபட்ட வீரத்தை உலகுக்கு எடுத்து காட்டியவர்கள் எமது மாவீரர்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தாயக விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களின் நினைவு நாளில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உலகில் அநியாயத்திற்கு நல்லவர் ஒருவர் இருந்தார் என்றால் அது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மட்டுமே.

எனினும், அவரை தீவிரவாதி, பயங்கரவாதி என்றெல்லாம் அழைத்தார்கள். யார் என்ன கூறினாலும் எனக்கு உயிர், உறவு, தெய்வம் எல்லாமே விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனே.

அது போலவே யார் என்ன கூறினாலும் தமிழ் மக்களின் ஒரே ஒரு தலைவர் வே.பிரபாகரன் மட்டுமே என சீமான் தெரிவித்துள்ளார்.