தாயக மாவீரர் துயிலும் இல்லத்தை நினைவு படுத்திய சுவிட்சர்லாந்து

342 0

hqdefaultதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த வீரமறவர்களை நினைவுகூரும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள்’ உலக வாழ் தமிழர்களால் புலம்பெயர் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டன.

இந்த நிலையில் சுவிட்சருர்லாந்து நாட்டிலும் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் துயிலுமில்லப் பாடலுடன் மாவீரர் வணக்க பாடல்கள் இசைக்க சுவிட்சர்லாந்தின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த மக்கள் உணர்வு பூர்வமாக மலர் வணக்கம் செலுத்தியுள்ளனர்.

தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி – களமாடி மரணமடைந்த வீரமறவர்களை நினைவு கூரும் முகமாக தற்போது இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

சுவிட்சர்லாந்து நாட்டில் பல்லாயிரம் மக்கள் புடை சூழ மாவீரர் தினம் எழுச்சியுடன் இடம்பெற்றது.