கண்டி பிரதேசத்தில் நேற்று இரவு சிறிய அளவில் நில அதிர்வு உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கண்டி பிரதேசத்தில் சிறிய அளவில் நில அதிர்வு உணரப்பட்டதாகப் புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது
கண்டி மாவட்டத்தின் ஹாரகம, திகண,மைலாப்பிட்டிய ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நில அதிர்வு உணரப் பட்டுள்ளதாகச் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இப்பகுதியில் நிலநடுக்கம் எதுவும் ஏற் படவில்லை என புவியியல் ஆராய்ச்சி மற்றும் சுரங்க பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக் கப்படுகிறது.
மேலும், இது தொடர்பிலான விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்காகக் குழுவொன்று குறித்த பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அதன் பணிப் பாளர் நாயகம் டீ.சஜ்சன டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்த அப்பகுதி மக்கள் அச்சமடையத் தேவை யில்லை என புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.